ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதிகள்; முறியடித்த பாதுகாப்பு படை: பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்பின் சதியை முறியடித்தற்காக, பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ‘‘பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும், அவர்களிடம் அதிகளவிலான ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டதைக் காட்டுகிறது. அது மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மற்றொரு ட்விட்டரில், ‘‘நமது பாதுகாப்புப் படைகள், மீண்டும் மிகுந்த துணிச்சலையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் விழிப்புடன் செயல்பட்டதற்கு நன்றி. ஜம்மு காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த சதியை அவர்கள் முறியடித்துள்ளனர்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்