நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை: இ-சஞ்சீவனி மூலம் 8 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 8 லட்சத்துக்கும் (8,00,042) அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 7500-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் 220 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்குகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் உடல் இடைவெளியை உறுதி செய்து, பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது.

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசி செயலியை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 2,59,904 தொலைதூர ஆலோசனைகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,19,715 தொலைதூர ஆலோசனைகளும், கேரளாவில் 58,000-மும், இமாச்சலப் பிரதேசத்தில் 46,647-ம், மத்தியப் பிரதேசத்தில் 43,045-ம் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்