கண்டறியப்படாத மற்றும் விடுபட்ட கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க, கோவிட் பரிசோதனையை அதிகரிக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்ததையடுத்து அங்கு உயர்நிலை குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுக்கள், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளன.
இதேபோல் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உயர்நிலைக் குழுக்களை அனுப்புவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
கண்டறியப்படாத, விடுபட்ட கோவிட் நோயாளிகளைக் கண்டறிய கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
» கோவிட்-19 சவால்; நாடுமுழுவதும் 50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்: ஹர்ஷ் வர்தன் பாராட்டு
» லவ் ஜிகாத் என்ற வார்த்தை பாஜக தயாரிப்பு: அசோக் கெலாட் விமர்சனம்
நாட்டில் இதுவரை 12,95,91,786 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட (10,83,397) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகளவிலான பரிசோதனை, நோய் பாதிப்பு வீதம் குறைவதை உறுதி செய்துள்ளது. இன்று ஒட்டு மொத்த பாதிப்பு விகிதம் 6.95 சதவீதமாக உள்ளது.
34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவான, ஒரு மில்லியன் பேருக்கு 140 பரிசோதனைகளை விட அதிகமாக மேற்கொள்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 4,43,794 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 44,807 பேர் குணடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 84,28,409 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 93.60% சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 81.85% பேர், 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago