லவ் ஜிகாத் என்ற வார்த்தை பாஜக தயாரிப்பு: அசோக் கெலாட் விமர்சனம்

By செய்திப்பிரிவு

லவ் ஜிகாத் என்ற வார்த்தையே பாஜகவால் தயாரிக்கப்பட்டது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

லவ் ஜிகாத்தை தடுக்கபோவதாக உ.பி. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகா மாநிலங்கள் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஜூனாபூரில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில் “ மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும்.

எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், பெருமையையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும்.

சமீபத்தில் அலகாபாத் நீதிமன்றம் ஓர் வழக்கில் தீர்ப்பளித்தது. மதம்மாறி திருமணம் செய்த ஜோடி போலீஸ் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். திருமணமான பெண் பிறப்பால் முஸ்லிம், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக்குமாறியுள்ளார். திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன். மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும். ”எனத் தெரிவித்தார்.

அதற்கேற்ப தற்போது அம்மாநில உள்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக் கடிதத்தை அனுப்பியுள்ளது.இந்தச் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘லவ் ஜிகாத் என்ற வார்த்தையே பாஜகவால் தயாரிக்கப்பட்டது. இது நாட்டையும், மதநல்லிணக்கத்தையும் பிரிக்கக் கூடியது. திருமணம் என்பது தனிமனித சுதந்தரம் சம்பந்தப்பட்டது. இதனை தடுப்பதற்காக சட்டம் கொண்டு வருவதாக கூறுவது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. இது எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்