ஆந்திராவில் அரசு பள்ளிகளில் சேர கூடுதலாக 2.68 லட்சம் மாணவர் விண்ணப்பம்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்த திட்டத்தின்படி இந்த ஆண்டில் கூடுதலாக 2.68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவதை விட, அரசுப் பள்ளிகளில் சேர பதிவுசெய்துள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 42.46 லட்சம் மாணவர் கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் சேர பதிவு செய்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் 39.78 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தனர். இந்த ஆண்டு 2.68 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.

இதனால் மொத்த மாண வர்களின் எண்ணிக்கை 42.46 லட்சமாக உயர்ந்தது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புதிதாக ‘ஜெகணண்ணா அம்மவொடி', ‘ஜெகணண்ணா வித்யாகானுகா' போன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டங்களால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர பதிவு செய்துள்ளனர் என முதலமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது

முந்தைய தெலுங்குதேசம் ஆட்சியின் அலட்சியப் போக்கால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினர். இதனால்அரசுப் பள்ளிகளில் அதிகமாக மாணவர்களின் சேர்க்கை இல்லாமல் போனது.

ஆனால் கடந்த மே மாதத்தில் ஆரம்பித்த திட்டங்களால்தான் தேர்வுகளில் நல்ல முடிவுகள் வந்தன என ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியினர் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்