பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை நாளை காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு, நவம்பர் 19ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரை நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டை கர்நாடக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொழில்நுட்பத்துக்கான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொடக்க நிறுவனங்கள், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காSTPI), எம்எம் அறிவியல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கர்நாடக அரசு நடத்துகிறது. பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஷன், சுவிஸ் துணை அதிபர் கய் பர்மலின் உட்பட சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், சிந்தனையாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள் ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். ‘‘அடுத்தது இப்போது’’ என்ற கருப்பொருளில், இந்தாண்டு உச்சி மாநாடு நடக்கிறது. கொவிட் தொற்றுக்கு பிந்தைய உலகின் முக்கிய சவால்கள், முக்கிய தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்ப துறையின் புதுமையான கண்டுபிடிப்புகள், உயிரி தொழில்நுட்பம் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago