அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன் ஒன்றும் இந்தியாவுக்கு அந்நியர் அல்ல. ஆகையால், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேட்வே ஹவுஸ் ஒருங்கிணைத்த இணையக் கருத்தரங்கில் நேற்று மாலை அவர் பேசியதாவது:
''ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோதே இந்தியாவுடன் நட்புறவில் இருந்தார். ஒபாமா ஆட்சியின்போது நான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தேன். அப்போது, அமெரிக்க செனட்டின் வெளியுறவுத் தொடர்புக் குழுவின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக, தலைவராக இருந்த பைடன் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
இந்திய - அமெரிக்க உறவு ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொண்ட மிக முக்கியமான தருணத்தில் அவர் நம் நாட்டுடன் நல்லுறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்தியாவுக்கோ, இந்திய - அமெரிக்க நல்லுறவைப் பேணுவதிலோ ஜோ பைடன் அந்நியர் அல்ல.
» பிஹாரில் என்டிஏ கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியைக் கைப்பற்ற தேஜஸ்வீ திட்டம்
நாங்கள் எங்கே விட்டோமோ அங்கிருந்தே பயணத்தைத் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமெரிக்க அரசியல் சற்று வித்தியாசமானது. அங்கு நாம் ஆட்சியில் இருப்பவர்களுடன் மட்டும் உறவைப் பேணினால் போதாது. அந்நாட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இருப்பினும் பைடன் தலைமையில் நம் நட்புறவில் சிக்கல் இருக்காது''.
இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.
பைடனுக்கு மோடி வாழ்த்துத் தெரிவித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago