நாடுமுழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,164 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 4 மாதங்களில் இல்லாத ஒன்றாகும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 88,74,291 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 449 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,519ஆக அதிகரித்துள்ளது.
» பிஹார் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை
» கரோனா எதிர்ப்பு; பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது: வெங்கய்ய நாயுடு பெருமிதம்
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 82,90,371 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40,791 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 12,077 என்ற அளவில் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 4,53,401 ஆக கீழ் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 12,65,42,907 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8,44,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago