பாகிஸ்தான் எல்லையில் 300 தீவிரவாதிகள்: பிஎஸ்எஃப் தகவல்

By ஏஎன்ஐ

பாகிஸ்தானின் எல்லையிலும் ஒவ்வொரு ஏவுதளத்திலும் சுமார் 300 தீவிரவாதிகள் இருப்பதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 13 ம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தனித்தனி இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், இச்சம்பவங்களின்போது யூரி செக்டரில் இருவரும், குரேஸ் செக்டரில் ஒருவரும் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளையும், பாகிஸ்தான் ராணுவத்தின் போர்நிறுத்த மீறல்களையும் இந்தியா முறியடித்தது.

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த மீறல்களுக்குப் பிறகு எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ராஜேஷ் மிஸ்ரா நேற்று செய்தியாளர்களை சந்தித்ததாக ராணுவ வட்டாரங்கள் திங்கள் கிழமைதெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ராஜேஷ் மிஸ்ரா கூறுகையில், ''பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் ஒவ்வொரு ஏவுதளங்களிலும் சுமார் 250-300 தீவிரவாதிகள் ஒளிந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் சமீபத்திய போர் நிறுத்த மீறல்களால் காஷ்மீர் எல்லையோர பொதுமக்களின் சொத்துக்களுக்கு பெருத்த சேதமும் உட்பட ஏராளமான தீங்குகள் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பதில் நமது பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன'' என்று தெரிவித்தார்.

நவம்பர் 13- ம் தேதி பாகிஸ்தானின் பல்வேறு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது,

​​"காஷ்மீர் எல்லையோர மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச சமூகத்திடம் மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட வேண்டும்" என்று மிஸ்ரா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்