முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலை போன்றே ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜும் நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் (!870-1954), ஜைனத்துறவியாக எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பரப்ப சுயநலமில்லாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார். மக்களின் நலனுக்காகவும், கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை களைவதற்காகவும், ஊக்குவிக்கும் இலக்கியங்களை( கவிதை, கட்டுரைகள், பக்தி பாடல்கள்) படைத்து இடையறாமல் பணியாற்றியதுடன், சுதேசியத்தை வலியுறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.
அவருடைய ஊக்குவிப்பால், கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன.
ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவரது சிலையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
» கரோனா; தொடர்ந்து 44-வது நாள்: தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» வெள்ளத்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது பரிதாபம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள்
அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் திறந்து வைக்கப்படவுள்ள சிலைக்கு ‘அமைதி சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
151 அங்குலம் உயரமுள்ள இச்சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் செம்பு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியல் ஏராளமான ஜைன துறவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதம் மோடி கூறுகையில் ‘‘முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலை போன்றே ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜும் நாட்டிற்காக வாழ்கையை அர்ப்பணித்தவர். அவரது சிலையை திறந்து வைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago