புகழ்பெற்ற வங்காள நடிகர் சௌமித்திர சட்டர்ஜி காலமானார்

By பிடிஐ

மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற சௌமித்திர சட்டர்ஜி கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

உலகின் புகழ்மிக்க இயக்குநர்களில் ஒருவராகக்கொண்டாடப்படும் சத்யஜித்ரே இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவர் சௌமித்திர சட்டர்ஜி. அப்பூர் சன்சார் (அப்புவின் உலகம்) என்றத் திரைப்படத்தில் 1959ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து சத்யஜித்ரே இயக்கிய சாருலதா, ஆரண்ய தீன் ராத்திரி, கணசத்ரு, ஆஷனி சங்கர், சந்தீப், ஷாகா புரோஷாகா உள்ளிட்ட ஏராளமான பெங்காலி மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார். சத்ய ஜித்ரேவின் படங்களில் இவர் நடித்ததில் மிகவும் முக்கியமான படம் சாருலதா.

புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஷர்மிளா டாகூருடன் இணைந்து ஆரண்ய தின் ராத்திரி, பர்னாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து எண்ணற்ற படங்களில் இணைந்து நடித்ததன்மூலம் இருவரும் பெங்காலி ரசிகர்களிடையே புகழ்மிக்க ஜோடியாக விளங்கினர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை சௌமித்திர சட்டர்ஜி பெற்றுள்ளார். 2004ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார். திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 2012ல் சௌமித்திர சட்டர்ஜி பெற்றார்.

தனியார் மருத்துவமனையில் மறைவு

நீண்டகால நோய்களின் தாக்கத்தினால் இன்று கொல்கத்தா தனியார் மருத்துவமனை பெல்லி வ்யூ கிளினிக்கில் அவர் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சௌமித்திர சட்டர்ஜி (85), கோவிட் -19 க்கு நேர்மறை பரிசோதனை செய்த பின்னர் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடனடியாக அவர் தொற்றுநோயிலிருந்து மீண்டார். எனினும் அவர் நரம்பியல் சிக்கல்கள் உட்பட பல நோய்களால் அவதிப்பட்டதால் அவரது நிலை மேம்படவில்லை. இன்று (நவம்பர் 15, 2020) பெல்லி வ்யூ கிளினிக்கில் மதியம் 12.15 மணியளவில் சௌமித்ர சட்டோபாத்யாயா தனது இறுதி மூச்சை சுவாசித்ததாக கடும் மனதுடன் அறிவிக்கிறோம்.

அவரது ஆத்மாவுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

இவ்வாறு மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்