இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 80.13 லட்சத்தை கடந்தது.
மேலும் ஒரே நாளில் 44,281 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 86.36 லட்சத்தை கடந்து 86,36,012 ஆக உள்ளது 4.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,27,571 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் மரணமடைந்துள்ளனர்.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 4,94,657 ஆக உள்ளது
குணமடைந்தோர் எண்ணிக்கை 80 லட்சத்து 13 ஆயிரத்து 783 ஆக உள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.79% ஆக உள்ளது.
» கமல்நாத், திக்விஜய் சிங் இருவரும் மிகப்பெரிய துரோகிகள்: ஜோதிராதித்ய சிந்தியா விமர்சனம்
» உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பிஹார் கற்றுக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி வெற்றி முழக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சம் எண்ணிக்கையைக் கடந்த்து, இன்றைய தேதியில் 86 லட்சத்தைக் கடந்துள்ளது
ஐசிஎம்ஆர் தகவல்களின்படி மொத்தமாக சோதிக்கப்பட்ட சாம்பிள்கள் எண்ணிக்கை 12,07,69,151 ஆக உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 11 லட்சத்து 53 ஆயிரத்து 294 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டன.
நேற்று பலியான 512 புதிய பலிகளில் மகாராஷ்டிராவில் 110 பேரும், டெல்லியில் 83 பேரும், மேற்கு வங்கத்தில் 53 பேரும், உ.பி.யில் 30 பேரும், கேரளாவில் 28 பேறும் தமிழகத்தில் 25 பேரும், கர்நாடகா, பஞ்சாபில் தலா 20 பேரும் மரணமடைந்தனர்.
மொத்த பலி எண்ணிக்கையான 127,571 பேரில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது, அங்கு இதுவரை 45,235 பேர் பலியாகியுளனர். கர்நாடகாவில் 11,430, தமிழ்நாட்டில் 11,387, மேற்கு வங்கத்தில் 7,403, உ.பி.யில் 7,261, டெல்லியில் 7,143, ஆந்திராவில் 6,814, பஞ்சாபில் 4,358, குஜராத்தில் 3,770 பேர் பலியாகியுள்ளனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago