பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெற்றுள் ளது. கடும் இழுபறிக்குப் பிறகு ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களைப் பிடித்து பின் தங்கியது.
பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். அந்த மாநில சட்டப்பேரவைக்கு அக்.28, நவ.3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. அதேபோல மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட் டது. இதுதவிர ராஷ்டிரிய லோக் சமதா, பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜனவாதி கட்சி, சுகல்தேவ் சமாஜ் கட்சி, ஜனதந்தரிக் ஆகிய கட்சிகள் இணைந்து மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் தனியாக போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை
பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன. பிற்பகல் நிலவரப் படி பாஜக கூட்டணி அதிக தொகுதி களில் முன்னிலை வகித்தது. எனினும் சுமார் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆர்ஜேடி கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 முதல் 1000 வரை மட்டுமே இருந்தது.
மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூ பிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 124 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.
இதில் பாஜக 73, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
ஆர்ஜேடி கூட்டணிக்கு 111 இடங் கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 76, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன.
மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 5, பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தை கைப்பற்றியது.
பாஜக - ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற் பார் என கூறப்படுகிறது
தேஜஸ்வி யாதவ் வெற்றி
லாலுவின் இளைய மகனும் ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளரு மான தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஹஸன்பூரில் வெற்றி பெற்றார்.
நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா காங்கிரஸ் சார்பில் பன்கிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பாஜக வேட்பாளர் நிதின் நபினிடம் தோல்வியடைந்தார். கடந்த தேர் தலை போலவே முதல்வர் நிதிஷ் குமார் இந்த தேர்தலிலும் போட்டி யிடவில்லை. ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, இமாம்கன்ஞ் தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் ஜமுய் தொகுதியில் போட்டியிட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் வெற்றி பெற்றார்.
மறு எண்ணிக்கை கோரி மனு
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்ட பதிவில், ‘ஆளும் அரசு நிர்பந்தம் அளித்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "குறிப்பிட்ட 8 தொகுதிகளில் 12, 13 வாக்கு கள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் தோல்வியடைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா கூறும்போது, "யாருடைய நிர்பந்தத்துக்கும் ஆணையம் அடிபணியாது. பிஹார் தேர்தல் ஆணையம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பிஹாரில் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப் போம் என்பதை ஒவ்வொரு வாக் காளரும் உறுதி செய்துள்ளனர். தங்களின் கனவுகள், விருப்பங்கள் நிறைவேற மாநில மக்கள் மீண்டும் பாஜக கூட்டணிக்கு ஆசி வழங்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் வாக் காளர்களுக்கு நன்றி தெரி வித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago