சமூக வலைதளங்களில் தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு திரட்டிய 2 சகோதரிகள்

By செய்திப்பிரிவு

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறுவனரான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான மிசா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாகவும், 2 மகன்களான தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் எம்எல்ஏ-க்களாகவும் உள்ளனர்.

இதில், கடைக்குட்டியான தேஜஸ்வி இந்த முறை பிஹார்தேர்தலில் அமைந்த மெகா கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டி ருந்தார்.

31 வயதே நிறைந்துள்ள தேஜஸ்விக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும், ஆதரவும்எழுந்தது. ஆனால் சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்புகளுக்கு 2 மூத்த சகோதரிகளான ரோஹிணி ஆச்சார்யாவும், ராஜலட்சுமியும் பதில் வழங்கி ஆச்சர்யப்படுத்தினர். ஒரு பிரபல வங்கியில் பணியாற்றும் தன் கணவர் ஆச்சார்யாவுடன், ரோஹிணி சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

இவர் தேர்தலுக்காக பாட்னாவந்து தனது தாயும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியுடன் தங்கியுள்ளார். இவர் தனது சமூகவலைதளக் கணக்குகள் மூலம் தன் சகோதரர் தேஜஸ்விக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.

ரோஹிணியின் பதிவுகளுக்கு சமூகவலைதளங்களில் நல்லவரவேற்பு கிடைத்து வந்தது.தனது பதிவில் அவர் பிரபலபாலிவுட் படங்களின் தலைப்புகளுடன் தன் சகோதரரை ஒப்பிட்டு பதிவிட்டார்.

அரசியல் ரீதியாகவும் ரோஹிணியின் இந்தப் பதிவுகளுக்கு வரவேற்பு கிடைத்தது.இவரைப்போல, கடைசி சகோதரியான ராஜலட்சுமியும், ரோஹிணிக்கு இணையாக சமூகவலைதளங்களில் களம் இறங்கி தேஜஸ்விக்காகப் போராடினார்.

இவரது கணவரான தேஜ் பிரதாப், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் கொள்ளுப் பேரனாவார்.

அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மனைவியான ராஜலட்சுமி எட்டவாவில் வசித்து வருகிறார். ரோஹிணியைப் போல ராஜலட்சுமியும் தனது மாமியார் வீட்டில் அனுமதிபெற்று பாட்னா வந்துள்ளார்.

ராஜலட்சுமியின் கணவர்தேஜ் பிரதாப் யாதவ் உ.பி.யின்இளம் அரசியல்வாதியாக உள்ளார். இரண்டு சகோதரிகளுமே தேஜஸ்வியின் அன்றாட நடவடிக்கைகளை படங்களுடன் சமூகவலைதளங்களில் இட்டபதிவுகள் இன்றும் பேசப்படுகின்றன. இவையும் தேஜஸ்வியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த இரண்டு சகோதரிகளும்அரசியலுக்கு இதுவரை வரவில்லை. எனினும், எதிர்காலத்தில் அவர்கள் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக பிஹார்வாசிகளால் கணிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்