பிஹாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 123 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி 114 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னமும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்த மகா கூட்டணி முன்னிலை பெற்றாலும், அதன்பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது.
243 இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 123 இடங்களில் பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.
» உ.பி. இடைத்தேர்தல்: 6 இடங்களில் பாஜக வெற்றி; ஓரிடத்தை சமாஜ்வாதி கைப்பற்றியது
» குஜராத் இடைத்தேர்தல்: 8 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக; காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு
என்டிஏ கூட்டணியில் போட்டியி்டட நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டதில், 42 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேசமயம், 110 இடங்களில் போட்டியி்ட்ட பாஜக 72 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
பாலிவுட்டின் முன்னாள் அரங்கு வடிவமைப்பாளர் முகேஷ் ஷானியின் கட்சியான விகாஷில் இன்சான் கட்சி என்டிஐ கூட்டணியில் இடம் பெற்று 11 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 76 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது. மகா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான சிபிஐ-எம்எல் 12 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
மத்தியில் என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டது சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago