உத்தர பிரதேசத்தில் இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவே வெல்லும், எந்த கட்சியாலும் தோற்கடிக்க முடியாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெற்ற 7 தொகுதிகளில் பாஜக 8 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
» ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகச்சரியானவை: குறை சொல்லாதீர்கள்’’- கார்த்தி சிதம்பரம்
» ‘‘குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி’’ - திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
‘‘இடைத்தேர்தலில் பாஜக எதிர்பார்த்தது போலவே பெரும் வெற்றி பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்றதை போலவே தற்போதும் வென்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவே வெல்லும். எந்த கட்சியாலும் தோற்கடிக்க முடியாது.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago