பல பெண்களுக்கு ஹெச்ஐவி பரப்பிய திருடன் கைது

By என்.மகேஷ் குமார்

திருடனாக மாறிய ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிந்தும் பல பெண்களுடன் உறவு வைத்து, அவர்களுக்கும் ஹெச்ஐவியை பரப்பியுள்ளார். திருட்டு வழக்குக்காக அவரைக் கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் மில்காஜிகிரி மிர்ஜாலகூடா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜோசப் ஜோன்ஸ் (31). இவர் குறுக்கு வழிகளில் சம்பாதித்து உல்லாச வாழ்க்கை வாழ எண்ணினார். இதனால் பல இடங்களில் திருட தொடங்கியவர், தனது நண்பரின் வீட்டிலும் நகைகளை திருடினார். இது குறித்து நண்பரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஜோசப் ஜோன்ஸை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோசப் ஜோன்ஸ் 3 திருமணம் செய்து கொண்டுள்ளார். 3 மனைவி களும் அவரின் தீய பழக்கங்களால் பிரிந்து சென்று விட்டனர். பின் தனியாக வாழத்தொடங்கிய இவர், திருடிய பணம், நகைகளைக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

ஆனால் அதனைப் பொருட் படுத்தாமல், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் எனப் பலரைத் தன் வலையில் விழ வைத்த ஜோசப் ஜோன்ஸ், அவர்களுடன் உறவு கொண்டு அவர்களுக்கும் ஹெச்ஐவியை பரப்பியுள்ளார்.

இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவரது செல்போனில் பல பெண்களின் தொலைபேசி எண்கள் இருப்ப தாகவும், அவை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

ஜோசப் ஜோன்ஸ் தன் நண்பர் வீட்டில் திருடிய ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்