நம் நாட்டில் உச்சத்தை எட்டிய கரோனா வைரஸ் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்றும் கருதப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தீபாவளி தினத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளை வெடிக்க எந்தத்தடையும் விதிக்கப் போவதில்லை. அதே நேரத்தில், மக்களே பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மாநிலத்தில் வைரஸ் பரவல் குறைந்திருக்கும் சூழலில், பட்டாசுகள் மூலம் காற்று மாசு அதிகரித்தால், மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படும். இது அடுத்தகட்ட பொதுமுடக்கத்துக்கும் வழிவகுக்கும். எனவே, மக்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago