பாஜக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அத்வானி 'வாழும் உத்வேகம்': மோடி புகழாரம் 

By பிடிஐ

பாஜக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் ஒரு 'வாழும் உத்வேகம்' அத்வானி என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி 1927 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்நிலையில் அவரது 93ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் இன்று பிரதமர் மோடி சந்தித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்தனர்.

பிரதமர மோடி வாழ்த்து

அத்வானியின் பிறந்த நாளுக்கு மோடி ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

''நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர் அத்வானி ஜி.

கட்சியை மக்களிடம் எடுத்துச் சென்றவர், மில்லியன் கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு அவர் நேரடியான உத்வேகமாக இருப்பவர். பாஜக தொண்டர்களுக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அவர் ஒரு 'வாழும் உத்வேகம்'.

அத்வானி ஜிக்கு வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் பிரார்த்தனை செய்கிறேன்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வாழ்த்து

அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், ''அத்வானி ஜி தனது கடின உழைப்பு, தன்னலமற்ற சேவையால் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்தது மட்டுமல்லாமல், பாஜகவின் தேசியவாத சித்தாந்தத்தின் விரிவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். அவரது பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் அவரை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜே.பி.நட்டா வாழ்த்து

ஜே.பி.நட்டா ட்விட்டரில் கூறுகையில், ''முன்னாள் துணைப் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி ஜியின் பிறந்த நாளில், அவரது அரசியல் அர்ப்பணிப்பு, கொள்கைகளுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்