கரோனா அச்சத்தால் ஒடிசாவில் பள்ளிகளை திறக்கும் முடிவு டிசம்பர் 31 வரை தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

பள்ளிகளை திறப்பதாக அறிவித்திருந்த ஒடிசா அரசு தற்போது அதைத் திரும்பப் பெற்றிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. தற்போது கரோனா பரவல் சற்று குறைந்திருப்பதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆந்திராவில் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இது, மற்ற மாநிலங்களுக்கு ஓர்எச்சரிக்கை செய்தியாக இருந்தது.

இந்நிலையில், ஒடிசாவில் நவம்பர் 2-வது வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை அம்மாநில அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. ஒடிசாவில் டிசம்பர் மாதம் கரோனா பரவல் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இந்த முடிவை மாநில அரசு எடுத்திருக்கிறது. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அங்கு பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்