மாணவர்களின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தும் வகையில் மொழி ஆய்வகங்கள் அமைக்கபபட உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரப் பிரதேச மாணவர்கள் தற்போது பலவீனமான தகவல்தொடர்பு திறனைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, மாணவர்கள் நம்பிக்கையின்றி இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த மொழி ஆய்வகம் நிச்சயம் பயனளிக்கும்.
இதற்காக 10 மாவட்டங்களில் பாலிடெக்னிக்களில் மொழி ஆய்வகங்கள் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களிலும் மொழி ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ.1.75 கோடி செலவு செய்யப்படும்.
உ.பி. அரசின் சார்பாக அமைக்கப்படும் மொழி ஆய்வகங்கள், எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக், அமேதியில் உள்ள சஞ்சய் காந்தி பாலிடெக்னிக், அசாம்கரில் உள்ள சாவித்ரிபாய் புலே அரசு பாலிடெக்னிக், மற்றும் கான்பூர் தேஹாட், கவுஸ்மாபி, ஷ்ரவஸ்தி, குஷினகர், சாண்ட் கபீர்நகர் மற்றும் கஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் உள்ள எம்.எம்.ஐ.டி (தகவல் தொழில்நுட்பத்திற்கான மகாமயா பாலிடெக்னிக்) ஆகியவற்றில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு உபயோகமாக இருக்கும்.
இவ்வாறு உ.பி.முதல்வர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago