பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாதகமாக அவர்களை நீதிமன்றங்களுக்கு அழைக்காமல் வீடியோ கேமிரா மூலம் விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது. இதற்காக, விபச்சாரத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, பிரதமர் நரேந்தர மோடிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம்பெண்கள், சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்களால் கடத்தப்பட்டும், பலவந்தமாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவது தடுக்க முடியாமல் உள்ளது. இதனால், பாதிக்கப்படும் பெண்கள் அவர்களுக்கு பயந்து எதிராகப் புகார் தரவும் முன்வருவதில்லை.
இவர்களில் புகார் தரும் பெண்கள் விசாரணைக்காக நீதிமன்றம் வரும் போது மிரட்டப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க பாதிக்கப்படும் பெண்களை நீதிமன்றங்களுக்கு அழைக்காமல் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வீடியோ கேமிரா மூலம் விசாரணைகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அரசிற்கு யோசனையாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது இருக்கும் பாலியல் தொழில் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து நாடாளுமன்றத்தில் அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில்,
‘பாதிக்கப்பட்டவர்களை அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இடையே ஒரு பாதுகாப்பு சுவராக விடீயோ கேமிரா விசாரணை இருக்கும். இதன்மூலம் குற்றவாளிகளுக்கு பயந்து காவல்நிலையம் வராத பாதிக்கப்பட்டவர்களும் புகார் தர முன்வருவதற்கு வழிவகை செய்யும். இதன்மூலம் விபச்சாரத் தடுப்பு சட்டத்தின் பிடியில் சிக்கும் குற்றவாளிகள் தப்பி விடும் எண்ணிக்கை குறைந்து விடும் என்பதையும் குறிப்பிட்டு நம் அமைச்சகத்தின் அமைச்சர் மேனகா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.’ எனத் தெரிவித்தனர்.
இதில் பெரும்பாலான பெண்கள், தாம் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து வெகுதூரம் உள்ள வேற்று மாநிலங்களின் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் நீதிமன்ற வழக்குகளை சந்தித்த வேண்டி நீண்ட தூரம் பயணம் செய்வது பாதுகாப்பு அற்றதாகவும் இருக்கிறது. இதை தவிர்க்க வீடியோ கேமிராவானால் ஆன விசாரணை அவசியம் எனக் கருதப்படுகிறது. இதற்காக, நாட்டின் ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் வீடியோ மூலம் விசாரணை செய்வதற்கான வசதியும் அமைக்க வேண்டும் என பிரமருக்கு எழுதிய கடிதத்தில் மேனகா வலியுறுத்தி உள்ளார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையிலும் பாலியல் தொழில் சார்ந்த வழக்குளின் எண்ணிக்கை மீது ஒரு கேள்வி எழுப்பபட்டது. இதற்க்கு பதில் அளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சரான ஹரிபாய் பர்திபாய் சௌத்ரி, கடந்த 2012-ல் 3554, 2013-ல் 3940, 2014-ல் 5466 என கூடிக் கொண்டே வருவதாகக் கூறி இருந்தார். எனினும், இதில் பணியாற்றி வரும் பொதுநல அமைப்புகள், பாலியல் தொழிலினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் சுமார் இரண்டரை லட்சம் எனக் கணக்கிடுகின்றனர். இதன் மீது மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் டெல்லியில் நாளை மறுதினம் அக்டோபர் 7-ல் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கை மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைத்து உறையாற்ற இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago