முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை தடுக்க முயன்ற காவலர்: கார் பேனட்டில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

By பிடிஐ

புனே அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவரின் காரை தடுத்து நிறுத்த போக்குவரத்து காவலர் ஒருவர் முற்பட்டார். அப்போது நிற்காமல் சென்ற காரின் பேனட்டில் போக்குவரத்துக் காவலர் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கோவிட் 19 நோய்த்தொற்று இன்னும் குறையாத நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

பொதுமக்கள் சாலை விதிகள் மற்றும் கோவிட் 19 நெறிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வது போக்குவரத்துக் காவலர்களின் கடமைகளில் ஒன்றாகும். ஆனால், சாலையில் தன் கடமையை செய்ய முயன்ற போக்குவரத்துக் காவலரை துன்புறுத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புனே நகரில் நேற்று மாலை நடந்துள்ளது.

இதுகுறித்து சின்ச்வாட் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது:

"அபாசாகேப் சாவந்த் என்ற காவலரும் போக்குவரத்து காவல்துறையின் பிற காவலர்களும் வியாழக்கிழமை மாலை சின்ச்வாட்டில் உள்ள அஹிம்சா சவுக்கில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது அல்லது போக்குவரத்து தொடர்பான பிற குற்றங்களில் ஈடுபட்டு சவாரி செய்வது போன்றவற்றிற்காக அபராதம் வசூலித்தனர்.

சம்பவத்தின்போது, சாவந்தும் அவரது சகாக்களும் கார் ஓட்டுநர் ஒருவர் முககவசம் அணியாமல் காரை ஓட்டிச்செல்வதை கண்டனர். வாகனத்தில் இன்னொரு பயணியும் இருந்தார், அவரும் முகக்கவசம் அணியவில்லை. காவல்துறையினர் காரை நிறுத்தும்படி உத்தரவிட்டனர். இருப்பினும், நிறுத்துவதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் முயற்சியில் வாகனத்தின் வேகத்தை அதிகரித்தார்.

சாவந்த், காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தபோதே ஓட்டுநர் காரை இயக்கத் தொடங்கினார். அதனால் உடனே என்னசெய்வது எனத் தெரியாமல் போக்குவரத்துக் காவலர் சாவந்தும் ​​ அதன் பேனட்டில் (காரின் முன்பக்கம்) விழுந்து அதில் ஒட்டிக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் காரை நிறுத்தவில்லை, கார் பேனட்டில் ஒட்டிக்கொண்ட சாவந்த் உடன் சிறிது தூரம் ஓட்டுநர் காரை ஓட்டிக்கொண்டே இருந்தார்.

ஆனால் அவரை பொருட்படுத்தாமல் காரை ஓட்டிச் சென்றதோடு மட்டுமின்றி. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் போக்குவரத்து காவலர் அபாசாகேப் சாவந்த் காலில் காயம் அடைந்தார்.

சிசிடிவி கேமராவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள கார் ஓட்டுநர், யுவராஜ் ஹனுவதே (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிம்பிள் நிலாக் பகுதியில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது. அவர் மீது உரிய பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக சாவந்த் கூறுகையில் ''குற்றம் சாட்டப்பட்டவர் சாலையில் மற்றவர்களால் வந்து மடக்கி நிறுத்தப்படும் வரை கார் போய்க்கொண்டுதான் இருந்தது. பேனட்டில் ஒட்டிக்கொண்ட என்னுடன் காரை ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிக்கொண்டே இருந்தார் அந்த ஓட்டுநர், இந்த சம்பவத்தின் போது, ​​சக்கரத்தின் கீழ் வந்ததால் என் காலில் காயம் ஏற்பட்டது," என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 307 (கொலை முயற்சி), 353 (ஒரு அரசு ஊழியரை தாக்கியது அல்லது தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க தாக்குதலில் ஈடுபட்டது), 333 (அரசு ஊழியரை கடமையில் இருந்து தடுக்க தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துவது) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில்
பிம்பிள் நிலாக் பகுதியில் வசிக்கும் ஹனுவதே மீது சின்ச்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்