பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி நஷ்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாபில் நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டங்களால் இதுவரை ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதையடுத்து, பஞ்சாப் விவசாயிகள் ரயில் நிலையங்களில் இருந்து மட்டும் வெளியேற சம்மதித்துள்ளனர். அதேநேரம் ரயில் மார்க்கங்களில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டங்கள் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஒருவர் கூறும்போது, “மத்திய அரசு வேண்டுமென்றே தவறான தகவல்களை கூறி எங்கள் போராட்டத்தை முடக்கப் பார்க்கிறது. அரசு தரும் அழுத்தத்தால் போராட்டத்தை கைவிட மாட்டோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்