தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான ரிபப்ளிக் தொலைக்காட்சி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள பள்ளியில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
கட்டிட உள் வடிவமைப்பாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அலங்காரங்கள் செய்த வகையில் தனக்கு வரவேண்டிய பல கோடி ரூபாயை அர்னாப் கோஸ்வாமி தராமல் இழுத்தடித்ததாகக் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த 2018-ல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை 18-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை அலிபாக்கில் உள்ள சிறையில் அர்னாப்பை அடைக்காமல், அங்கு தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார். தற்காலிக சிறையானஅப்பள்ளியில்தான் அர்னாப் நேற்று முன்தினம் இரவைக் கழித்தார். கரோனா பரவாமல் தடுக்கபுதிய கைதிகள் தற்காலிக சிறைகளில் அடைக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தும் காலம் முடிந்தபின் அர்னாப் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் 23 நகரங்களில் 30தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கரோனா பரவலைத் தடுக்க உதவும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago