‘விவாகரத்து கோரி மனு செய்தது முதலே ஜீவனாம்சம் பெற மனைவிக்கு உரிமை உண்டு’

By செய்திப்பிரிவு

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது விவாகரத்து செய்யப்படும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிப்பது தொடர்பாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:

இந்து திருமண சட்டத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்தான மனைவிக்கு எப்போதில் இருந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நாளில் இருந்தே ஜீவனாம்சம் பெற முன்னாள் மனைவிக்கு உரிமை உண்டு.

முறைப்படி ஜீவனாம்சம் பெறும்வரை இடைக்கால ஜீவனாம்சம் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைய சில ஆண்டுகள் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது முதலே ஜீவனாம்சம் பெற முதல் மனைவி உரிமை பெறுவதுதான் சரியாக இருக்கும். மேலும், நீதிமன்றத்தில் வாதாட விவாகரத்து பெறும் மனைவிக்கு நிதி நெருக்கடி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்