டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழா; பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

By செய்திப்பிரிவு

நவம்பர் ஏழாம் தேதி நடைபெறும் டெல்லி ஐஐடியின் ஐம்பத்தோறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்.

வரும் நவம்பர் ஏழாம் தேதி, சனிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஐம்பத்தோறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்.

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் தோக்ரா அரங்கில் குறைந்த அளவிலான மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், பட்டம் பெறும் அனைத்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள் உள்ளிட்டோர் மெய்நிகர் வாயிலாகக் கலந்து கொள்வார்கள்.

பி எச்டி, எம் டெக், வடிவமைத்தல் படிப்பில் முதுநிலைப் பட்டம், எம்பிஏ மற்றும் பி டெக் மாணவர்கள் உட்பட 2000 மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பட்டங்கள் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநரின் தங்கப் பதக்கம், டாக்டர் சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம், சிறந்த பத்து தங்கப் பதக்கங்கள் மற்றும் நிறுவனத்தின் வெள்ளிப் பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்