உ.பி.யின் கோயிலில் தொழுகை, மசூதியில் அனுமார் மந்திரம் அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி –முஸ்லிம் உலமாக்கள் புகார்

By ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசம் மதுரா கோயிலில் நடந்த தொழுகைக்கு பின், சில மசூதிகளில் ஹனுமர் மந்திரம் ஓதப்பட்டது. இவை அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கை என அம்மாநிலத்தின் முஸ்லிம் உலமாக்கள் புகார் கூறியுள்ளனர்.

மதுராவின் நந்த் கிஷோர் பாபா கோயிலில் கடந்த மாதம் 29 இல் இரண்டு முஸ்லிம்கள் நடத்திய தொழுகை சர்சையானது. இதில், இரண்டும் முஸ்லிம்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவாகி நடைபெறுகிறது.

இதன் பதில் நடவடிக்கையாக மதுராவில் முஸ்லிம்களின் ஈத்காவில் 4 இளைஞர்கள் ஹனுமர் மந்திரம் ஓதி கைதாகினர். தொடர்ந்து அருகிலுள்ள பாக்பத் மசூதியில் பாஜகவின் நிர்வாகியான மனுபால் பன்ஸல், ஹனுமர் மந்திரம் ஓதியிருந்தார்.

இம்மசூதியின் இமாமிடம் பன்ஸல் அனுமதி பெற்று அதை செய்ததால் எந்த வழக்கிலும் சிக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் அரசியல் லாபம் பெறும் பொருட்டு செய்யப்படுவதாக தியோபந்த் மதரஸாக்களின் உலாமாக்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து தியோபந்தை சேர்ந்த ஒரு மதரஸாவின் உலமாவான முப்தி தாரீக் காஸ்மி கூறும்போது, ‘இந்து-முஸ்லிம்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம், அரசியல் லாபம் எடுக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து அதற்கான பதிலடி அளிப்பார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி மக்கள் இடையே அமைதி தொடரச் செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

மற்றொரு முப்தியான மவுலானா இஸாக் கோரா கூறும்போது, ‘சில மாநிலங்களின் தேர்தல் நடைபெறும் நிலையில் அதில்

ஆதாயம் பெற இந்த நடவடிக்கைகள் கோயிலும், மசூதியிலும் அரங்கேற்றப்படுகிறது.

இந்தியா ஒரு மதசார்பாற்ற ஜனநாயக நாடு. இங்குள்ள மக்கள் இணைந்து வாழ்ந்து சகோதரத்துவத்தை வளர்க்கின்றனர். இருவர் மற்றவரின் மதநம்பிக்கையில் தலையிடாமல் வாழும் நிலையை குலைக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.’ எனத் தெரிவித்தார்.

கோயிலில் தொழுத பைஸலுக்கு ஷாஹீன் பாக் தொடர்பு

இதனிடையே, மதுராவின் நந்த் கிஷோர் பாபா கோயிலில் தொழுகை நடத்தி பிரச்சனையை துவக்கி வைத்த பைஸல் கானுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மதுரா போலீஸாரால் கைதாகி உள்ளவர் தற்போது 14 நாட்களுக்காக தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் டெல்லியின் ஷாஹீன்பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல நாள் நடைபெற்ற போராட்டத்தில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து குணமசைந்த பின் பைஸலிடம் விசாரணை தொடர உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்