கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,210 ஆக அதிகரிக்க மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83 லட்சத்து, 64 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 77 லட்சத்து 11 ஆயிரத்து 809 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.20% ஆக உள்ளது.
இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.
» சோனிபட் நகரில் 20 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலி மதுபானம் காரணமா? -ஹரியாணா போலீஸார் சந்தேகம்
கரோனா பலி விகிதாச்சாரம் 1.49% ஆக உள்ளது.
நாட்டில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 962 பேர் கரோனாவினால் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 6.31% ஆக உள்ளது.
ஐசிஎம்ஆர் கணக்குகளின்படி மொத்தம் 11 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 384 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. நவ.4ம் தேதியான நேற்று மட்டும் 12,09,425 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 704 மரணங்களில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 304 பேரும், மேற்கு வங்கத்தில் 55 பேரும், டெல்லியில் 51 பேரும், சத்திஸ்கரில் 50 பேரும் கர்நாடகாவில் 34 பேரும் தமிழ்நாட்டில் 30 பேரும், கேரளாவில் 28 பேரும் பலியாகினர்
1,24,315 மரணங்களில் மகாராஷ்டிரா 44,548 மரணங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிரது. கர்நாடகாவில் 11,281 பேரும் தமிழகத்தில் 11,244 பேரும், உ.பி.யில் 7.104 பேரும், மேற்கு வங்கத்தில் 7,068 பேரும், ஆந்திராவில் 6,744 பேரும், டெல்லியில் 6,703 பேரும், பஞ்சாபில் 4,259 பேரும், குஜராத்தில் 3,737 பேரும் மரணமடைந்துள்ளனர்.
மரணங்களில் 70 சதவீத மரணங்கள் நீண்ட கால தீவிர நோய்களுடன் கரோனாவினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago