நிதிஷ் குமார் மீது வெங்காயம் எறிந்ததற்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கண்டனம்

By செய்திப்பிரிவு

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் எறியப்பட்டது மோசமான செயல் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அம்மாநிலத்தின் மதுபானி பகுதியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர், அவர் மீது வெங்காயத்தை எறிந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் நேற்று கூறியதாவது: அரசுக்கு எதிராக போராடவும், எதிர்ப்பை பதிவு செய்யவும் ஜனநாயகத்தில் பல வழிகள் இருக்கின்றன. வாக்களிப்பது கூட நமது எதிர்ப்பை காட்டும் ஒரு வழிமுறைதான். அதை விட்டுவிட்டு, முதல்வர் மீது வெங்காயம் எறிவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைத்து போராட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு தேஜஸ்வி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்