போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான கேரள மார்க்
சிஸ்ட் செயலாளர் மகன் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூருவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் மோகன் மற்றும் அனூப் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு பண உதவி செய்ததாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன்பினீஷ் கொடியேறியை அமலாக்கத் துறையினர் பெங்களூருவில் கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு வில் இருந்து நேற்று காலையில் கேரளா வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், திருவனந்தபுரத்தில் உள்ள பினீஷ் கொடியேறி வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் வடக்கு கேரளாவில் பல இடங்களிலும் பினீஷுக்கு சொந்தமான வீடுகள், அலுவல கங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலில் மேலும் 5 நாட்கள் பினீஷை விசாரிக்க கடந்த திங்கட்கிழமை உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது. அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago