பஞ்சாப் விவசாயிகள் போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இச்சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்தது.
மூன்று புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் பஞ்சாப்பில் தொடர் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ரயில்வே துறைக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:
''மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் ரயில் தடங்களை வழிமறித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நடைமேடைகளில் / ரயில் பாதைகளின் குறுக்கே தொடர்ந்து தர்ணா நடத்தியதால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏற்கெனவே ரூ.1,200 கோடியைத் தாண்டிவிட்டன.
இன்றுவரை முக்கியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 2,225க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போராட்டங்களின்போது சுமார் 1,350 சரக்கு ரயில்கள் ரத்து செய்யப்படவோ அல்லது திருப்பிவிடவோ கட்டாயப்படுத்தப்பட்டது.
திடீரென சில ரயில்களின் போக்குவரத்தை வழிமறித்து நிறுத்தியதால், குறிப்பாக ஜான்டியாலா, நாபா, தல்வாண்டி சபோ, பதிந்தாவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான முற்றுகை தொடர்ந்ததால், பாதுகாப்புக் காரணங்களால் ரயில் இயக்கம் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.
பஞ்சாபில் ரயில் தடங்களின் பிரிவுகளில் தொடர்ந்து வழிமறிக்கப்பட்டுள்ளதால், சரக்கு இயக்கத்தில் பெரும் பாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயம், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கும் முக்கியப் பொருட்கள் கிடைப்பதில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
கிளர்ச்சியாளர்கள் திடீரென சில ரயில்களின் போக்குவரத்தை வழிமறித்ததால், குறிப்பாக ஜான்டியாலா, நாபா, தல்வாண்டி சபோ மற்றும் பதிந்தாவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான முற்றுகை தொடர்ந்ததால், பாதுகாப்புக் காரணங்களால் ரயில் இயக்கம் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. பஞ்சாபில் ரயில் தடங்களின் பிரிவுகளில் தொடர்ந்து வழிமறிக்கப்பட்டுள்ளதால், சரக்கு இயக்கத்தில் பெரும் பாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது, எனவே விவசாயம், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கும் முக்கிய பொருட்கள் கிடைப்பதில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் ரயில்வே நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தடங்கள் மற்றும் இயங்கும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து முதல்வருக்கு உத்தரவாதம் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
டெல்லியில் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்தியில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் தலைமையிலான ஒரு குழுவைச் சந்திக்க மறுத்ததைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தர்ணாவைத் தான் முன்னின்று நடத்தப்போவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவிந்திருந்தார்.
தற்போது டெல்லி காவல் துறையின் ஆலோசனையின் பேரில் பஞ்சாப் முதல்வரின் இந்த ஆர்ப்பாட்டம் ஜந்தர் மந்தரில் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago