உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து 10 எம்.பி.க்கள் பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பாஜகவின் பலம் 92 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்த மாநிலங்களவையில் இனிமேல் பாஜக கூட்டணியின் அதிகாரமே மேலோங்கியிருக்கும். காங்கிரஸ் கட்சியின் பலம் 38 ஆக மாநிலங்களவையில் குறைந்துள்ளது.
இதில் மாநிலங்களவைக்குத் தேர்வாகிய 10 பாஜக எம்.பி.க்களில் மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி உள்பட 6 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர்.
242 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் எந்த மசோதாவையும் நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் பாஜகவுக்கு தற்போது 92 உறுப்பினர்களும், கூட்டணியுடன் சேர்க்கும்போது 104 ஆகவும் உயர்ந்துள்ளது.
பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ராம்தாஸ் அத்வாலேவின் ஆபிஐ கட்சி, அசாம் கன பரிசத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றிடம் தலா ஒரு இடம் உள்ளது.
இதனால் பாஜகவின் என்டிஏ கூட்டணியின் பலம் 104 ஆகவும், நியமன உறுப்பினர்கள் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால், 108 ஆகவும் அதிகரித்துள்ளது.
இவை தவிர பாஜக கூட்டணியில் சேராத ஆனால், நட்பு பாராட்டும், தேவைக்கு ஏற்ப ஆதரவு தரும் அஇஅதிமுக (9 எம்.பி.க்கள்), பிஜூ ஜனதா தளம் ( 9 எம்பிக்கள்), தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (7 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர்பி கட்சி (6 எம்.பி.க்கள்) ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 139 ஆக அதிகரித்து அசுர பலம் கிடைத்துவிடும்.
பாஜக சார்பில் போட்டியின்றி நிரஜ்சேகர், அருண் சிங், கீதா சாக்யா, ஹரித்வார் துபே, பிரிஜ்லால், பி.எல்.வர்மா, சேமா துவேதி ஆகியோரும், சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் ராம்ஜி கவுதம் ஆகியோரும் தேர்வானார்கள். இவர்கள் நவம்பர் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். இவர்கள் பதவிக்காலம் 2026 நவம்பர் 26 ஆம் தேதி வரை இருக்கும். உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒரு இடத்தை காங்கிரஸ் இழந்தது.
இந்த முறை நடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டில் சமாஜ்வாதி கட்சி 3 இடங்களை இழந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை இழந்துள்ளது. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில் இனிமேல் நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் விரைவாக நிறைவேற்றிட முடியும்.
மாநிலங்களவைக்காக நடந்து வரும் தேர்தலில் சீராக எதிர்க்கட்சிகள் தங்கள் பிடியை இழந்து வருகின்றன. தற்போது 38 எம்.பி.க்களுடன் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், எந்த மசோதாவையும் எதிர்த்தாலும், அதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப் போராடினாலும் அல்லது நிறைவேற்ற முடியாமல் செய்ய முயன்றாலும் அது தோல்வியில் முடியவே அதிகமான வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago