ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஜிதேந்திர சிங் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஊழல் கண்காணிப்பு வாரம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பதற்கான அரசின் உறுதியை வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் அலுவலர்களுக்கு ஒருமைப்பாட்டு உறுதிமொழியை செய்து வைத்த அவர், ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் 'பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி என்னும் திட்டத்தை இந்த நிகழ்வின் போது அமைச்சர் தொடங்கி வைத்தார்.

'மின்-ஆளுகையில் சிறந்த நடவடிக்கைகள்' குறித்த சமூக ஊடக பதிவுகளையும் அவர் வெளியிட்டார்.

பிரதமரின் தாரக மந்திரமான ஊழலுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மையை தனது உரையில் வலியுறுத்திய ஜிதேந்திர சிங், ஊழலுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி' திட்டம் மைகவ் தளத்திலும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையாலும் செயல்படுத்தப்படும்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்