பாதுகாப்பு சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு; சென்னையில் பயிற்சி

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சர்வீஸ் தேர்வு (II), 2019-இன் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டோர் சென்னையில் பயிற்சி பெறுகின்றனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II), 2019-இன் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

எழுத்துத் தேர்வு முலமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவை தேர்வு வாரியத்தால் நேர்முகத் தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 241 (*174 + ^67 ) விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் குறுகிய கால ஆணைய பயிற்சியை பெறுகின்றனர்.

இந்த பயிற்சி 112-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (ஆண்களுக்கான) பயிற்சி மற்றும் 26-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (பெண்களுக்கான) பயிற்சி ஆகும்.

தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும் போது விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானது ஆகும்.

ராணுவ தலைமையகத்தால் விண்ணப்பதாரர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வித் தகுதி சரிபார்ப்பு நடைபெறும். தேர்வு தொடர்பான தகவல்களை http://www.upsc.gov.in என்னும் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்