காஷ்மீரில் ஹிஸ்புல் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் சைபுல்லா சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பல்வேறு தீவிர வாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த ரியாஸ் நைகூ கடந்த மே மாதம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, புதிய தலைவ ரான சைபுல்லாவும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடு பட்டவர் ஆவார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நகர் அருகே ரங்ரெத் பகுதியில் ஒரு வீட்டில் சைபுல்லா பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியை போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் சுற்றிவளைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. நீண்ட நேரம் நடந்த சண்டையில் தீவிரவாதி சைபுல்லா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐ.ஜி. விஜய் குமார் கூறும்போது, ‘‘கொல்லப்பட்ட தீவிரவாதி சைபுல்லா, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர்என்பது எங்களுக்கு கிடைத்ததகவல்படி 95% உறுதியாகியுள்ளது. அவரது உடல் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்படும். துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீவிரவாதி என்று சந்தேகத் துக்கிடமான ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். இது காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினருக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்