உத்தரபிரதேசத்தில் ஹாத்ரஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 80 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைபடுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29-ம் தேதி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். 30-ம் தேதி இரவு அந்தப் பெண்ணின் கிராமத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இரவே தகனம் செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்தினக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உ.பி. அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்தது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘உ.பி. அரசு அளித்து வரும் பாதுகாப்பு திருப்தி அளிக்கிறது. எனினும், அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்துக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று சிஆர்பிஎப் கமாண்டர் மன்மோகன் சிங் தலைமையில் 80 சிஆர்பிஎப் படை வீரர்கள் ஹாத்ரஸ் வந்தனர். அவர்கள் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். உள்ளூர் பள்ளியில் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago