ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தள அரசுகளை பார்த்துவிட்டீர்கள், பிஹார் மக்கள் அடுத்ததாக எங்கள் புதிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹாரில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டத் தேர்தல் கடந்த அக்டோபர் 28 அன்று நடைபெற்றது. நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவடையும் நிலையில் பிஹாரில் உள்ள அரசியல் கட்சிகள் மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிஹார் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 80 இடங்களில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதுகுறித்து இன்று ட்விட்டரில் மாயாவதி கூறியதாவது:
''பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் 94 இடங்களுக்கான பிரச்சாரம் இன்று முடிவடைகிறது. மேலும், அனைவரின் கவனமும் நவம்பர் 3 வாக்களிப்பில் உள்ளது.
வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தள அரசுகளை நீங்கள் பார்த்துவிட்டீர்கள், பிஹார் மக்கள் அடுத்ததாக எங்கள் புதிய கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல இன்னொரு ட்வீட்டில் மாயாவதி உ.பி. மற்றும் ம.பி. இடைத்தேர்தல் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மாயாவதி கூறுகையில்,
''உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச. சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 7 இடங்களும் மத்திய பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 28 இடங்களும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.
இத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறுமாறு வாக்களித்துவிட்டு இந்த சரியான அரசியல் தகவலை போட்டிக் கட்சிகளுக்கு அனுப்புங்கள்: அதுவே சிறப்பாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago