கோவிட்-19 சரியான நடத்தை செயல்முறைகள் பற்றிய தகவல்களுடன் சுமார் 1.10 கோடி மக்களை ஆயுஷ் துறையுடன் தொடர்புடையவர்கள் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆயுஷ் துறையினர் கோவிட்-19-க்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைந்துள்ள நிலையில், பாரம்பரிய மருத்துவ முறையில் இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க அளவு வேகமடைந்துள்ளது
ஆயுஷ் மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நல மையங்கள் மற்றும் இதர இடங்களை இந்த இயக்கம் சென்றடைகிறது. ஆயுஷ் துறையினர் மக்களோடு நெருங்கி பணிபுரிவதால், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் மக்களின் செய்கைகளில் மாற்றம் கொண்டு வருவதில் வெற்றியடைந்துள்ளனர்.
2020 அக்டோபர் 26 முதல் 30 வரையிலான 5 நாட்களில் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய ஆய்வில் இதை காண முடிந்தது. கோவிட்-19 சரியான நடத்தைமுறைகள் பற்றிய தகவல்களுடன் சுமார் 110 லட்சம் மக்களை ஆயுஷ் துறையுடன் தொடர்புடையவர்கள் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாமல் போகலாம் என்பதால் இந்த பரப்புரை முக்கியத்துவம் பெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களை கொவிட் விதிமுறைகளைப் பின்பற்ற செய்வதில் ஆயுஷ் துறையினரின் இடையீடுகள் முயற்சிகள் வலு சேர்க்கின்றன.
பல்வேறு ஆயுஷ் மையங்கள், ஆயுஷ் மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை) கிட்டத்தட்ட 5000 சுவரொட்டிகள், 8000 பதாகைகள் ஆகியவற்றை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வைத்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago