பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை மக்களே மன்னிப்பு கேட்கவைப்பார்கள் என்று பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் தப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இத்தொகுதியில நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்நாத், பாஜக வேட்பாளர் இமர்தி தேவியைத் தரக்குறைவாகப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்குப் பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையமும் கமல்நாத்துக்குக் கண்டனம் தெரிவித்தது.
நவம்பர் 3 ஆம் தேதி மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக பெண் வேட்பாளரை அவதூறாகப் பேசியதற்காக, மக்களே அவரை மன்னிப்பு கேட்கவைப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை கூறியதாவது.
''ஒரு நபர் (கமல்நாத்) ஒரு பெண்ணுக்கு எதிராக (பிஜேபி தலைவர்), குறிப்பாக பட்டியல் சாதியைச் சேர்ந்தவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவரிடம் தேர்தல் ஆணையம் முதலில் விளக்கம் கேட்டதுடன், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ, இப்போது மற்ற கட்சிகள் தோற்றதாகக் கூறுகிறார்.
கமல்நாத்தின் நடத்தை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். தேர்தல் ஆணைய நடவடிக்கை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக் கொண்டாலும், அவர் அதை மறுக்கிறார்.
நவம்பர் 3 ஆம் தேதி பொதுமக்கள் அவரை மன்னிப்பு கேட்க வைப்பார்கள். கமல்நாத்துக்குப் பொருத்தமான பதிலை அளிப்பார்கள்''.
இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago