85 நாட்களில் முதல் முறை; கரோனா பாதிப்பு 6 லட்சத்துக்கும் கீழ் குறைவு

By செய்திப்பிரிவு

கோவிட்டுக்கு எதிரான போரில் மற்றுமொரு முக்கிய மைல்கல் ஒன்றை இந்தியா இன்று தொட்டுள்ளது. கடந்த 85 நாட்களில் முதல் முறையாக தற்போதைய கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் வந்துள்ளது.

நாட்டின் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 5,94,386 ஆகும். கடைசியாக ஆகஸ்ட் 6 அன்று அப்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 5.95 லட்சமாக இருந்தது.

இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய பாதிப்புகளின் அளவு வெறும் 7.35 சதவீதம் ஆகும்.

அதிக அளவிலான கோவிட் நோயாளிகள் தினமும் குணமடைந்து வருகின்றனர். இது வரை 73,73,375 நோயாளிகள் குணமாகி உள்ள நிலையில், உலகிலேயே அதிக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது.

இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,386 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48,648 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய குணமடைதல் விகிதம் 91.15 சதவீதம் ஆகும்.

குணமடைந்தோரில் 80 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அரசின் விரிவான மற்றும் திறன்மிகுந்த பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை யுக்திகள் நாடு முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் இவை சாத்தியமாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்