கேரளாவில் ஜல் ஜீவன் திட்டம்; 49.65 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை

By செய்திப்பிரிவு

கேரளாவில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 49.65 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கேரள மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த இடைக்கால அறிக்கையை அந்த மாநிலத்தின்அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் வழங்கினர்.

இந்த அறிக்கையின்படி வரும் 2023- 24 ஆம் ஆண்டுக்குள் கேரளாவில் 100% ஊரக வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 67.15 லட்சம் ஊரக வீடுகளில் 49.65 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. 2020- 21ஆம் ஆண்டில் 21.42 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க அந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2493 வசிப்பிடங்களில் தண்ணீர் குழாய் இணைப்பு இதுவரை வழங்கப்படாதது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய ஜல்சக்தி இயக்கம், மாநிலத்தைக் கேட்டுக்கொண்டது.

2020-21 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கேரளாவிற்கு ரூபாய் 404.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்