நாட்டில் நிலவும் வேலையின்மை பற்றி பிரதமர் மோடி பேச மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
பிஹார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டம், வால்மீகி நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதை அறிந்து வேதனைப்பட்டேன். அங்குள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் கோபத்தின் வெளிப்பாடுதான் இது.
பிரதமர் மோடியும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் பேசும்போது வெளிநாடுகளைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் நம் நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. இதனால் பிஹார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இளைஞர்களும் விவசாயிகளும் அவர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.
நாட்டை வழிநடத்துவது, விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது எப்படி என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago