கரோனாவால் கடன் சுமைக்கு ஆளான கேஎஸ்ஆர்டிசிக்கு சிறப்பு நிதி: கேரள முதல்வர் அறிவிப்பு

By கா.சு.வேலாயுதன்

கடனில் தத்தளிக்கும் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) உதவிடும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''கோவிட் தொற்றுநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்தே கே.எஸ்.ஆர்.டி.சி வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. இதனால் கடுமையான கடன் சுமைக்கு ஆளாகி இருக்கும் கே.எஸ்.ஆர்.டி.சிக்கு உதவிடும் வகையில் சிறப்பு நிதியை ஒதுக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கே.எஸ்.ஆர்.டி.சிக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிதியாகத் தலா 1,000 கோடி ரூபாய் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இது 2,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து இதுவரை அரசின் சார்பில் மொத்தமாக கே.எஸ்.ஆர்.டி.சிக்கு 4,160 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் கே.எஸ்.ஆர்.டி.சிக்கு ஒதுக்கிய தொகை 1,220 கோடி ரூபாய். அதைவிடப் பல மடங்கு நிதித்தொகுப்பை ஒதுக்கியும் கூட அரசாங்கத்தின் மீது பல தரப்பிடம் இருந்து விமர்சனங்கள் வருகின்றன. கேரள அரசு பொதுத்துறைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அந்த வகையில் கே.எஸ்.ஆர்.டி.சியும் புனரமைக்கப்படும்.

கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்களின் சம்பள மீட்பு நிலுவைத் தொகை மற்றும் மருத்துவ ஈட்டுத் தொகை ஆகியவை 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு அவசர அடிப்படையில் ரூ.255 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும். 2012 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஊதியத் திருத்தத்திற்கான இடைக்கால நிவாரணமாக, அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கும் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கும்.

அரசு வழங்கிய கடன் நிலுவைத் தொகைக்கான வட்டியாக கே.எஸ்.ஆர்.டி.சி அரசுக்குச் செலுத்த வேண்டிய 961 கோடி ரூபாய் ரத்து செய்யப்படும். 3,194 கோடி ரூபாய் கடன், பங்குகளாக மாற்றப்படும். புதிய கடன் தொகுப்புக்காக வங்கிக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுக்கும்''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்