கோவிட் மொத்த பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 7.88 சதவீதமாக குறைவு

By செய்திப்பிரிவு

மூன்று மாதங்களுக்கு பிறகு மிகக் குறைந்த அளவிலான தினசரி பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.

கோவிட்டுக்கு எதிரான தனது போரில் குறிப்பிடத்தகுந்த பல்வேறு மைல்கற்களை இந்தியா எட்டியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 36,500-க்கு கீழ் வந்துள்ளது.

இறுதியாக 2020 ஜூலை 18 அன்று தினசரி பாதிப்புகள் 34,884 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 36,470 ஆக உள்ளது.

அதிக அளவிலான கோவிட் நோயாளிகள் தினமும் குணமடைந்து வருவதால் இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

இன்னுமொரு சாதனையாக, தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 6.25 லட்சமாக சரிந்துள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 6,25,857 நபர்கள் கோவிட் தொற்றோடு உள்ளார்கள். இது வரையிலான மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இது வெறும் 7.88 சதவீதம் ஆகும்.

மத்திய அரசின் விரிவான மற்றும் திறன்மிகுந்த பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை யுக்திகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தியதன் மூலம் இவை சாத்தியமாகியுள்ளன.

நாட்டின் தற்போதைய பாதிப்புகளில் 35 சதவீதம் வெறும் 18 மாவட்டங்களில் உள்ளன. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்தை தாண்டியுள்ளது (72,01,070). கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,842 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தேசிய குணமடைதல் விகிதம் 90.62 சதவீதத்தை எட்டியுள்ளது.

இது வரை குணமடைந்தவர்களில் 78 சதவீதம் பேர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்