போலி பெயர்களில் பினாமி பணம்; டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

By செய்திப்பிரிவு

டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

போலி ரசீதுகளின் அடிப்படையில் பெருமளவு பணத்தை கையாளுதல் மற்றும் பல தனிநபர்களைக் கொண்டு இயங்கி வரும் ஒருங்கிணைந்த பினாமி கட்டமைப்பை கண்டறிய வருமானவரித் துறை நேற்று (26-10-2020) சோதனை மேற்கொண்டது.

டெல்லி-என்சிஆர், ஹரியாணா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் 42 இடங்களில் வருமானவரித் துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

பினாமிகள், தரகர்கள், பணத்தை கையாளுபவர்கள், பலன் அடைந்தவர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்ற ஆதாரங்களின் படி ஒட்டு மொத்த கட்டமைப்போடு ஒரு குழு இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. ரூபாய் 500 கோடிக்கும் அதிகமான பணம் பல்வேறு தனிநபர்களின் பெயர்களில் இருப்பதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதற்கான ஆவணங்களும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில்/கணக்குகளில் கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைத்திருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. போலி ரசீதுகளைப் பயன்படுத்தி பணம் பெற்றதும், உத்தரவாதம் இல்லாத கடன்கள் கொடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனைக்கு உட்படுத்தப்பட தனிநபர்கள் போலி நிறுவனங்களின் கணக்குகள் மற்றும் வங்கி கணக்குகளை போலியான பெயர்களில் இயக்குவதாக தெரியவந்தது. அவர்களின் பினாமி பங்குதாரர்கள், ஊழியர்கள், பணத்தை கையாண்டவர்கள், அதேபோல தொடர்புடைய பலன்பெற்றவர்கள் என ஒட்டு மொத்த பணப்பரிமாற்ற கட்டமைப்பும் தெளிவாகத் கண்டறியப்படும் வகையில் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நம்பிக்கைக்கு உரிய நபர்களின் பெயர்களிலும், போலி பெயர்களிலும் பல்வேறு வங்கிக்கணக்குகள் மற்றும் லாக்கர்களை நிர்வகிக்கும் பலன் பெறும் உரிமையாளர்களாகவும், கட்டுப்பாட்டாளர்களாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிஜிட்டல் முறையின் மூலம் வங்கி அதிகாரிகளின் துணையோடு இந்த செயலைச் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பலன் பெற்றவர்கள் முக்கியமான நகரங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகளில் பெரும் அளவில் முதலீடு செய்திருப்பதும் மற்றும் பல நூற்றுக்கான கோடி ரூபாய்கள் வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாகவும் வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சோதனையின் போது ரொக்கப்பணம் ரூ.2.37 கோடி, ரூ.2.89 கோடி மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றுடன் 17 வங்கி லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லாக்கர்கள் திறக்கப்பட்டு இன்னும் சோதனை மேற்கொள்ளப்படவில்லை. சோதனைகளின் அடிப்படையில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்