ஆந்திராவில் உருட்டுக்கட்டை தாக்குதல் உற்சவத்துக்கு தடை: 12 கிராமங்களில் பதற்றம்

By என்.மகேஷ்குமார்

ஆந்திராவில் உருட்டுக்கட்டை தாக்குதல் உற்சவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டா மல்லேஸ்வரர் கோயிலில் ஒரு விசித்திரமான உற்சவம் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சுமார் 12 கிராம மக்கள் கூடி ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொள்வர். இதில் பல சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த உற்சவத்தை காண்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து திரளான பக்தர்கள் செல்வது வழக்கம்.

தற்போது கரோனா பரவல் காரணமாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த உற்சவத்துக்கு கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் தடை விதித்துள்ளார். இந்த உற்சவத்தின் மூலம் கரோனா பரவும் அபாயம் உள்ளதால் இந்த ஆண்டு உற்சவத்தை நடத்த கூடாது என அவர் அறிவித்தார்.

ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அங்கிருக்கும் 12 கிராமங்களுக்கும் நேற்று முன்தினம் முதலாக போக்குவரத்து கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் வெளியே வந்து செல்ல முடி
யாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிப்பகுதிகளில் இருந்தும் 12 கிராமங்களுக்கும் புதிய ஆட்கள் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், எப்படியாவது இந்த உற்சவத்தை நடத்தியே தீருவோம் என அப்பகுதி கிராம மக்கள் உறுதிப்பூண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்