அந்தமானில் 100 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் குழாய் மூலம் குடிநீர்

By செய்திப்பிரிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கம் ஆய்வு நடத்தியது.

ஜல் ஜீவன் இயக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குறித்து அதன் அதிகாரிகள் தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழுவினருக்கு காணொலி மூலம் எடுத்துக் கூறினார்கள்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு கூட்டத்தில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கம் மத்திய குழுவினருக்கு அளிக்கப்பட்டது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள 400 கிராமங்களில் உள்ள 65,096 ஊரக வீடுகளில், 33,889 வீடுகளில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..

மீதம் இருக்கும் வீடுகளுக்கு 2021-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்