உ.பி. கிராமத்தில் மீண்டும் துணிகரம்: 16 வயது சிறுமியை வீடு புகுந்து சுட்டுக் கொன்ற சமூக விரோதிகள்

By உமர் ரஷித்

உத்தரப் பிரதேசம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வீடுபுகுந்து 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது பரபரப்பாகியுள்ளது.

சிறுமியை சிலர் தெருவில் போகும்போதும் வரும்போதும் கேலி கிண்டல் செய்து ஈவ்டீசிங் செய்துள்ளனர். அவர்களுக்கு இவரும் சரியான பதிலடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ரசூல்பூர் பகுதியில் வீட்டுக்குள் துணிகரமாகப் புகுந்து சிறுமியை நெற்றியில் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

“என் மகள் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும் ரவுடிகள் சிலர் அவரை கிண்டல், கேலி செய்வதும், அசிங்கமாகப் பேசியும் முறைதவறி நடந்து கொண்டனர். அவர்களுக்கு என் மகளும் கடும் பதிலடி கொடுத்தார், இப்போது என் மகளை என் கண்ணெதிரிலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்” என்றார்.

வெள்ளிக்கிழமையன்று இரவு 11.45 மணிக்கு இந்த படுபாதகச் செயல் நடந்துள்ளது.

விசாரணை நடத்தி வரும் போலீசார், “குடும்பத்தினர் கூறும் சம்பவக் கோர்வையில் முரண்பாடுகள் உள்ளன” என்று கூறுகின்றனர்.

குற்றவாளிகளான மனீஷ் சவுத்ரி யாதவ், சிவ்பால் யாதவ், கவுரவ் சாக் ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருபவர்களே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்