பிஹார் தேர்தலில் பயங்கரம்: எம்எல்ஏ வேட்பாளர் சுட்டுக்கொலை, ஆதரவாளரும் உயிரிழப்பு; துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடித்துக்கொல்லப்பட்டார்

By பிடிஐ

பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனதா தளம் ராஷ்டிரவாதி கட்சியின் எம்எல்ஏ வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஆதரவாளரும் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவரும் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் ஷியோஹர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இக்கொலைவெறித் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் திரிஹத் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கணேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறியதாவது:

​​ஸ்ரீ நாராயண் சிங், (45), புயன்ஹியா காவல் நிலைய பகுதியில் உள்ள ஹட்சர் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சனிக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிங் மீது ஏற்கெனவே ஒரு கிரிமினல் வழக்குப் பதிவு மற்றும் அவர் மீது மூன்று டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக் கொலைச் சம்பவம் இருதரப்பு யுத்தம் போன்று நடந்துள்ளது.

தாக்குதல் நடந்தபோது சிங் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார், அவர் ஷியோஹர் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கிருந்து அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்திய நபர் வேட்பாளருடன் நடந்து கொண்டிருந்த கூட்டத்திலேயே ஒருவராக இருந்தார், யாரும் எதிர்பாராத போது அவரை நோக்கி சுட்டார். இச்சம்பவத்தின்போது வேட்பாளரின் ஆதரவாளர்களில் ஒருவர் காயமடைந்தார், பின்னர் அவர் உயிரிழந்தார்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அப்பகுதியில் துணை ராணுவப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்தார்.

ஷியோஹர் தொகுதியில், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை தங்கள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியும் இதில் போட்டியிடுகிறது. இக்கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளரை இழந்துநிற்கும் ஜனதா தளம் ராஷ்டிராவாதி ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாகும்.

துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வேட்பாளர் நாராயண் சிங்கின் இறுதி சடங்கு இதுவரை நடத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்